தேதியும் நேரமும் தானாக அமைய: வேர்ட் டாகுமெண்ட்டில், அதனைத் தயாரிக்கிற நாள் மற்றும் நேரத்தினைக் கட்டாயமாக அமைக்க
விரும்புவோம். இது ஒரு கடிதமாக இருக்கலாம். அல்லது டாகுமெண்ட்டின் ஹெடர் அல்லது புட்டரக இருக்கலாம். வேர்ட் புரோகிராம் தேதி அல்லது நேரத்தினை விரைவாக அமைக்க வழி தருகிறது. இவற்றை அமைப்பதிலும் பலவகை பார்மட்களைத் தருகிறது. இந்த தகவலை டாகுமெண்ட்டில் ஒரு பீல்டாக அமைக்க வேண்டும். இதனை நாமாக அப்டேட் செய்திடலாம்; அல்லது தானாகவும் அப்டேட் செய்திடும் வகையிலும் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிமுறைகளை அமைக்கவும்.
1. கர்சரை டாகுமெண்ட்டின் எந்த இடத்தில் தேதி அல்லது நேரம் அமைக்கப்பட வேண்டுமோ அங்கு கொண்டு சென்று வைக்கவும்.
2. ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டெக்ஸ்ட் குரூப்பில் Date & Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட்Date & Time டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இதில் தேதி அல்லது நாள் காட்டப்படுவதற்கு பல வகை பார்மட் காட்டப்படும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. டாகுமெண்ட் திறக்கப்படும் அன்றைய நாள் மற்றும் நேரம் தானாகவே பதியப்பட வேண்டும் என விரும்பினால், கீழாக உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இதனைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் தேதி மற்றும் நேரத்தினை ஒரு பீல்டாக டாகுமெண்ட்டில் அமைக்கும் வழியை ஏற்படுத்துகிறோம்.
6. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். நீங்கள் அமைத்திட்டபடி, தேதி அல்லது நேரம் உங்கள் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும்.
பாரா பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது,வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா?இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும்.
வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால்,ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate sevenbiscuits,”என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar)இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் WordOptions டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்துSettings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட்Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது.
எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, Arial எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்த்தால் உங்களுக்கே இது தெரிய வரும்.
கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில்Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள்,போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.
No comments:
Post a Comment