Thursday, October 2, 2014

எமி ஜாக்சனுக்கு ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால் ஒரே கும்மாளம் தான்











இங்கிலாந்து இறக்குமதியான. நடிகை எமி ஜாக்சன், 'ஏக் திவானா தா' என்ற இந்தி படத்தில், பிரதீக்குடன் நடித்த போது, காதல் கிசுகிசுவில் சிக்கினார்.இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,'பிரதீக்குடன் எனக்கு ஏற்பட்டது காதல் அல்ல; நட்பு மட்டுமே. அவரைப் போன்று தான் ஆர்யாவும் என் நண்பர் பட்டியலில் உள்ளார். இந்த நட்பை காதல் என்று யாராவது கூறினால், அதைவிட சிறந்த காமெடி வேறு எதுவும் இருக்க முடியாது' என்றார்.மேலும், 'லண்டனில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். நாங்க எல்லாம் ஒன்று கூடி விட்டால் ஒரே கூத்து, கும்மாளம் தான். அந்த சந்தோஷமே தனி. இந்திய படங்களில் நடிக்க வந்த பின் என் லண்டன் நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்றேன்' என்கிறார் எமி ஜாக்சன்.

No comments:

Post a Comment