நடிகர் : நவீன் ராஜ்
நடிகை :வைஜெயந்தி
இயக்குனர்
:ஜெயக்குமார்.எம்
இசை :தினா
ஓளிப்பதிவு
:சுகுமார் எம் டி
கல்லூரியில்
மகேஷ் (நவீன்), சத்யா
(உதய்), சிந்து (வைஜெயந்தி)
ஆகியோர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்கள். நண்பர்களாக இவர்கள் கல்லூரிகளுக்கு
இடையேயான இசை நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றியடைந்து முதலிடத்தை பெற்று
கல்லூரிக்கு பெருமை சேர்கிறார்கள்.
மகேஷ் கல்லூரிக்கு சொந்தக்காரரான ராதாரவியின் மகன். இவன் பெண்களிடம் ஜாலியாக பேசுவதும், பழகுவதுமாக இருந்து வருகிறான். டிரம்ஸ் வாசிப்பதில் அதிக ஆர்வம் உடையவன். சத்யா நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன். தந்தையில்லாத இவன் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவன் படிப்பதற்கு மகேஷ் பல உதவிகளை செய்து வருகிறான். சிந்துவும் தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து கல்லூரியில் படித்து வருகிறாள். சிந்துவின் அம்மாவிற்கு அவள் ஆண்களுடன் பழகுவது பிடிக்கவில்லை.
இந்நிலையில், சத்யா, சிந்துவை ஒருதலையாக காதலித்து வருகிறான். ஆனால் சிந்துவோ மகேசை விரும்புகிறாள். மகேஷ் மற்ற பெண்களுடன் பழகினாலும் சிந்துவையும் காதலித்து வருகிறார். இருவரும் தங்களுடைய நண்பர்களுக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்கள்.
ஒருநாள் நண்பர்களின் ஆலோசனைப்படி சத்யா, சிந்துவிடம் காதலை சொல்ல செல்கிறார். அங்கு சிந்துவும் மகேசும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசுவதைகேட்ட சத்யா இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்கிறான்.
இதனால் மனமுடைந்த சத்யா, சிந்துவை தனியாக அழைத்து, மகேஷ் மோசமானவன், உன்னை கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். உன்னை கைவிட்டு விடுவான் என்று அவனைப்பற்றி அவதூறு கூறுகிறான். இதை ஏற்காத சிந்து சத்யாவை வெறுக்கிறாள். ஒருநாள் இவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வரும் நாள் வருகிறது. அனைவரும் சந்தோஷமாக பிரிகிறார்கள்.
இறுதியில் சிந்து, மகேஷின் சுயரூபத்தை புரிந்து கொண்டாளா? சத்யா என்ன ஆனான்? என்பதே மீதிக்கதை.
படத்தில் மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவீன், பணக்கார பையன் என்ற முகத்தோற்றம் மட்டும் தான் பொருந்துகிறது. மற்றபடி நடிப்பு, நடனம் எதுவே பொருந்தாமல் இருக்கிறது. இவர் டிரம்ஸ் வாசிப்பது அந்த இசைக்கும் இவர் அசைவுக்கும் ஏற்றார்போல் அமையவில்லை. சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உதய் சிறப்பாக நடித்திருக்கிறார். நடனம், சோகம் என நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சிந்து கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் வைஜெயந்தி, நடிப்பு என்னும் பெயரில் ஏதோ செய்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வரும் ராதாரவி, கேண்டீன் நடத்துபவராக வரும் டி.பி.கஜேந்திரன், கல்லூரி முதல்வராக வரும் மதன்பாப் ஆகியோர் கொடுத்த வாய்ப்பை திறமையாக செய்திருக்கிறார்கள். சங்கிலி முருகனாக நடித்திருக்கும் மனோபாலாவின் காமெடி படத்தில் எடுபடவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் ஆனந்த்பாபு, அவருக்கே உரிய பாணியில் நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
படத்தில் கதாநாயகர்கள், கதாநாயகிகளை தவிர மற்ற அனைவரும் அனுபவம் வாய்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கையாளத் தெரியாமல் அவர்களுக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைக்காமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். தெளிவான திரைக்கதை இல்லாததே படத்திற்கு பலவீனம். சொல்ல வரும் கதையை தெளிவாக சொல்லாமல் தேவையற்ற காட்சிகளை படத்தின் நீளத்திற்காக திணித்திருக்கிறார் இயக்குனர்.
ஏற்கெனவே ஜெயக்குமார், ஆனந்த்பாபு நடிப்பில் 1985-ம் ஆண்டு பாடும் வானம்பாடி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 300 நாட்களையும் தாண்டி ஓடியது. அந்த படத்தை இயக்கிய இயக்குனரா? இப்படியொரு படத்தை எடுத்தார் என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தினாவின் இசை படத்திற்கு பொருந்தாமல் இருந்திருக்கிறது. பின்னணி இசையையும் சொதப்பியிருக்கிறார். இவருடைய இசையில் ஒரு பாடல் மட்டும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சுகுமாரின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஜமாய்’ ஜமாய்க்கவில்லை.

No comments:
Post a Comment