முன்பெல்லாம் தெரு
நாய்களை யாராவது துன்புறுத்தினால்தான் த்ரிஷாவுக்கு கோபம் கொப்பளித்துக்
கொண்டு வரும். அவர்களைப் பார்த்து,
உங்களுக்கு
இதயமே இல்லையா? ஐந்தறிவு
பிராணிகளை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்களே என்று தனது டுவிட்டரில் கொந்தளிப்பார்.
அப்படி தனது கருத்துக்களை
பதிவு செய்து வந்த த்ரிஷா, சமீபகாலமாக சில சமூக சாடல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு
மாணவனை புலி அடித்து கொன்ற விவகாரத்தில், ஐந்தறிவு மிருகத்திற்கு என்ன தெரியும். நாம்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்
என்று அந்த புலியை கொல்ல வேண்டும் என்று கருத்து சொன்னவர்களுக்கு எதிராக தனது
கருத்தினை பதிவு செய்திருந்தார் த்ரிஷா
அதையடுத்து சமீபத்தில்
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதினால்தான் விபத்துக்குள் அதிகமாக நடக்கிறது. அதனால்
யாராவது போதையில் வாகனம் ஓட்டினால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சாடியிருந்தார்.
இது நல்ல விசயம்தான் என்றாலும், குடிமகன்களால் த்ரிஷரின் இந்த கருத்தினை தாங்கிக்கொள்ள முடியவிலலை.
அதனால் அவரது
இணையதளத்திற்குள் புகுந்து, ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு இப்ப எங்களோட அடிமடியிலேயே கையை வச்சிட்டீங்களா? இதெல்லாம் ரொம்ப தப்பும்மா? என்று தகாத வார்த்தைகளால்
வசைபாடுகிறார்களாம். இருப்பினும், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று எதையும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து
வருகிறார் த்ரிஷா.
No comments:
Post a Comment