Tuesday, October 7, 2014

பெல்லி டான்ஸ்சை யூ டியூப் பார்த்துக் கற்ற சானியாதாரா!

இன்றைய தேதியில் ஹன்சிகா, நயன்தாராவுக்கு அடுத்து அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது யார் என்று கேட்டால்
சானியாதாராதான். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு இவர்தான் ஆதர்சன ஹீரோயின். சங்கராபுரம், தகடு தகடு, வாரயோ வெண்ணிலாவே, மெய்மறந்தேன், கடை எண் 6 என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார். இதில் மெய்மறந்தேன் படத்தில் ஒரு கிக்கான பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் பெல்லி டான்சர் இல்லை.
இதுபற்றி சானியாதாரா கூறியதாவது: மெய்மறந்தேன் படத்தில் முதலில் பெல்லி டான்ஸ் இல்லை. ஒரு அயிட்டம் சாங் வைக்கிற மாதிரிதான் பிளான் பண்ணியிருந்தாங்க. திடீர்னு டைக்டர் நீயே ஆடும்மா என்றார். நானும் ஓகே என்றேன். சாதாரணமான குத்தாட்டம் வேண்டாம். பெல்லி டான்ஸ் ஆடமுடியுமான்னு கேட்டார்.
இரண்டு நாள் டயம் கொடுங்கன்னு கேட்டு யூ டியூப்புல இருக்கிற அத்தனை பெல்லி டான்சையும் போட்டு பார்த்து வீட்டில் ஆடக் கத்துக்கிட்டு இரண்டே நாள்ல ஷ¨ட்டிங் கிளம்பிட்டேன். இப்போ என்னோட டான்சை பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறப்போ சந்தோஷமா இருக்கு.

வாராயோ வெண்ணிலாவே படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறேன். கடை எண் 6 படத்தில் அக்கா, தங்கை என இரண்டு கேரக்டரில் நடிக்கிறேன். என்கிறார் சானியா தாரா.

No comments:

Post a Comment