Thursday, October 9, 2014

சொல்கிறார் சமந்தா: அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன்

நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிடுகிறவர் சமந்தா. சமீபத்தில் மோடியை பாராட்டி
டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தாவுக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. அதனை அவர் இப்போது தீர்த்து வைத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா சென்னை பொண்ணு. எனக்கு எப்போதுமே பெரிய ஆசைகள், கனவுகள், லட்சியம் இருந்ததில்லை. சென்னையில் ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் இதுதான் என்னோட குறைந்தபட்ச ஆசை. காரணம் நான் நடுத்தர குடும்பத்து பொண்ணு. சும்மா பாக்கெட் மணிக்காக மாடலாக போய் நின்னது வாழ்க்கைய புரட்டி போட்டது. இப்போது இந்த இடத்தில் நிற்கிறேன். அதுக்கு காரணம் மக்கள். நான் நினைச்சு பார்க்காத உயரத்தை எனக்கு கொடுத்திருக்காங்க. அவுங்களுக்கு நான் நிச்சயமா ஏதாவது செய்யணும். இப்போ வெளியில தெரியாம சில விஷயங்கள் செய்துகிட்டிருக்கேன். பெருசா ஏதாவது செய்யணும்னு மனசுல எண்ணமிருக்கு. நிச்சயமா அது அரசியலா இருக்காது. அரசியலில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.ஒரு சராசரி பொண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை,கணவன்னு சந்தோஷமா இருக்கணும்ங்றதுதான் என்னோட ஆசை. இந்த பரபரப்பான புகழ் வாழ்க்கையிலேருந்து விடுபடணுங்றதுதான் என்னோட விருப்பம் என்கிறார் சமந்தா.


No comments:

Post a Comment