ஏழாம் அறிவு, 3
படங்களைத் தொடர்ந்து தற்போது பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்
ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில்
விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் இதற்கிடையே மணிரத்னம் டைரக்ஷனில்
உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது
துல்கர்சல்மான்-நித்யாமேனன் நடிப்பதாக சொல்கிறார்கள். துல்கர்சல்மான் ஹீரோ
என்பதால்தான் அப்படத்தை ஸ்ருதிஹாசன் தவிர்த்து விட்டதாகவும் இன்னொரு செய்தி
உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால்
இதுபற்றி ஸ்ருதியைக் கேட்டால், மணி சார் படமென்றால்
எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் ஒர்க் பண்ண வேண்டும் என்ற ஆசை நான் நடிக்கத்
தொடங்கியதில் இருந்தே இருக்கிறது. ஆனால் அவர் கேட்ட தேதியில் என்னிடம் கால்சீட்
இல்லாததுதான் பிரச்சினையே. அடுத்த ஆண்டு இறுதி வரை எனது கால்சீட் டைரி புல்லாக
உள்ளது. அதனால்தான் அவர் படத்தில் நடிக்கவில்லை என்று கூறும் ஸ்ருதிஹாசன், இந்த முறை
அவர் படத்தில் நடிப்பது மிஸ் ஆனாலும், எதிர்காலத்தில் கட்டாயமாக
நடிப்பேன் என்கிறார். மேலும், தற்போது
பூஜை படத்தில் விஷாலுடன் நடிக்கும் ஸ்ருதியிடம்தான் சுசீந்திரன் இயக்கத்தில்
மீண்டும் விஷால் நடிக்கும் படத்திற்கு கால்சீட் கேட்டார்களாம். அந்த படம்கூட இதே
கால்சீட் பிரச்சினையால்தான் கைநழுவிப்போனதாம். ஆக,ஸ்ருதியின்
கால்சீட் பிரச்சினை காரணமாக, மணிரத்னம் படத்தில்
நித்யாமேனனும், சுசீந்திரன் படத்தில்
லட்சுமிமேனனும் கமிட்டாகியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment