Monday, October 6, 2014

அஜித் பட தலைப்பு...அறிவிப்பு??

வீரம்படத்திற்குப் பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை எந்த தலைப்பும் வைக்கப்படவில்லை. அஜித் கடைசியாக நடித்த இரண்டு படங்களுக்குமே தலைப்பு படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான்
அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது என்றும் சொன்னார்கள். ஒரு வேளை அந்த சென்டிமென்ட் காரணமாகவே இந்த புதிய படத்திற்கும் தலைப்பு வைப்பதை தள்ளிப் போடுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவீதம் அளவிற்கு முடிந்துவிட்டதாம்.


ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் படத்தின் தலைப்பை அறிவிக்கலாம் என்றும் ஒரு பேச்சு வந்தது. ஆனாலும், அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. தீபாவளி சமயத்திலும் அப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பில்லை. ஏனென்றால், 'கத்தி, பூஜை' போன்ற திரைப்படங்கள் வர இருப்பதால் அதற்கு முன்னதாகவே படத்தின் தலைப்பைப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் இப்படி படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருப்பதும் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டிதான். தலைப்பு என்ன என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயமாக அமைந்து விடுகிறது. அதோடு அஜித் ரசிகர்களும் 'தல 55' என ஆசையாக அழைத்தும் வருகிறார்கள். ஆயிரம் தோட்டாக்கள், சத்யாஎன சில பெயர்கள் படத்திற்கு வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ரசிகர்களின் ஆவலை மேலும் தாமதப்படுத்தாமல் இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பை பற்றிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment