விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் -
தாண்டவம். இப்படம் 2012செப்டம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு ஹிந்தியில்
எடுக்கப்பட்டு தமிழில் டப்
செய்யப்பட்ட டேவிட் என்ற படம் வெளியானாலும் அதை விக்ரம்
ரசிகர்களே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
விக்ரம் நடித்த படம் வெளியாகி நீண்ட காலமாகிறது
என்பதே அவர்களைப் பொறுத்தவரை பெரும் கவலையாக இருக்கிறது. எனவே, விக்ரம் கிட்டத்தட்ட
இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்த ஐ படத்தின் ரிலீசுக்காக பெரிதும் ஆவலுடன்
காத்திருக்கிறார்கள். ஐ படத்தை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் விக்ரம்
ரசிகர்களுக்கு கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பதுபோல், விக்ரம் நடித்த இன்னொரு
படமும் அடுத்தடுத்து வெளிவர உள்ளது.
ஐ படத்தில் நடித்து முடித்த கையோடு விஜய்
மில்டன் இயக்கத்தில் வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்
விக்ரம். 85 சதவிகித படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட இப்படம், ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட்
படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி
சேர்த்துள்ளார் சமந்தா. இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பசுபதி நடிக்கிறார். நவம்பரில் ஐ படம்
வெளியாகிறது. இப்படத்தின் ரிலீசை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பத்து
எண்றதுக்குள்ள படம் ரிலீசாகவிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில்
இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment