மெட்ராஸ்
படத்தில் நடித்த கேத்ரின் தெரசா சினிமாவில் அறிமுகமானது என்னவோ
கன்னட சினிமாவில்தான். என்றாலும் அவரும்
கேரளத்து சேச்சிதான். அதோடு, மலையாளம்,தெலுங்கு படங்களில் கடந்த 4 ஆண்டுகளாக நடித்து வந்தவர், 8
படங்களில் நடித்த பிறகுதான் தமிழில் மெட்ராஸ் படத்தில் நடித்தார். அந்த படத்தில் பக்கா ஸ்லம்
ஏரியா பெண்ணாக மாறி அவர் நடித்ததாக, கோடம்பாக்கத்தில் அந்த
படத்தில் நடித்த கார்த்தியோடு சேர்த்து கேத்ரினையும் புகழ்ந்து வருகிறார்கள்.
அதனால் அடுத்தடுத்து நடிப்பதற்கு கதை கேட்டு வரும் அவர், தற்போது
அதர்வா நடிக்கும் கணிதன் படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தெலுங்கில்
அனுஷ்கா நடித்துள்ள ராணி ருத்ரம்மா தேவி படத்திலும் இளவரசி ரோலில்
நடித்திருக்கிறார். மேலும், தமிழில்
தான் நடித்த முதல் படமான மெட்ராஸ் வெற்றி பெற்றதோடு தன்னையும பேச வைத்து விட்டதால், அடுத்தபடியாக
தமிழில் ஆழமாக காலூன்ற முடிவெடுத்திருக்கிறார் கேத்ரின் தெரசா, அதனால்
தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், அந்த
படங்களை முடித்ததும் தமிழில் நடிப்பதற்கு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு
வருகிறார். அதோடு,என்னைத்தேடி நகரத்து கதைகளே
அதிகமாக வருகிறது. ஆனால் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான கேரக்டரை
வெளிப்படுத்தும விதமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு அதிகமாக
உள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் கேத்ரின்.
No comments:
Post a Comment