Sunday, December 7, 2014

ரஜினி பிறந்தநாளில் காக்கி சட்டை இசை! பின்னணி காரணம் என்ன?

லிங்கா படம் வெளியாகும் டிசம்பர் 12 ஆம் தேதி, திரைப்படம் சம்பந்தமாக எது நடந்தாலும் அது வெளியே தெரியாமல்போய்விடும். அதனாலேயே, பல பெரிய படங்களின்
இசைவெளியீட்டுவிழாவைக்கூட லிங்கா ரிலீஸ் ஆன பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர். ரஜினியின் மருமகனான தனுஷோ வம்படியாய் தன் தயாரிப்பில் தயாராகி உள்ள காக்கிசட்டை படத்தின் இசை வெளியீட்டை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வைத்திருக்கிறார். எதிர்நீச்சல் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்கும் காக்கி சட்டை படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 5 அன்று வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் டிசம்பர் 5 அன்று இசைவெளியீடு நடைபெறவில்லை. இந்நிலையில் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி காக்கி சட்டை படத்தின் இசை வெளியீட்டை நடத்த தனுஷ் தீர்மானித்திருக்கிறாராம். லிங்கா படம் உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. அன்று காக்கிசட்டை படத்தின் இசையை வெளியிட்டால் எடுபடாது என்று அவருக்கு பலரும் சொல்லியும் அன்றுதான் வெளியிடுவேன் என்பதில் தனுஷ் உறுதியாக இருக்கிறாராம். சிறு வயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகராம். எனவே ரஜினியின் பிறந்தநாளில் தான் நடித்த படத்தின் இசை வெளியாவதில் சிவகார்த்திகேயன் ஹேப்பி. ரஜினியின் உறவினரான இசையமைப்பாளர் அனிருத்துக்குத்தான் தர்ம சங்கடமாம். என்ன செய்வது என் தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம்.


No comments:

Post a Comment