கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி உள்ள என்னை
அறிந்தால் படத்தின் டீசர், சில
நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான
48 மணிநேரத்திற்குள், 2 மில்லியனுக்கும் அதிகமான பேர், அதை பார்த்துள்ளதாக, சோனி மியூசிக் இந்தியா நிறுவனம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சோனி மியூசிக்
இந்தியா நிறுவனம் தெற்கு பிரிவு தலைவர் அசோக் பர்வாணி கூறியதாவது, தாங்கள் இசை ரசிகர்களுக்கு என்று தரமான
மற்றும் உயர்தர தொழில்நுட்பத்திலான இசை சிடிக்கள், டீசர் உள்ளிட்டவைகளை வெளியிட்டு வருகிறோம்.
தற்போது என்னை அறிந்தால் படத்தின் டீசரை, தங்கள்
நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான 48 மணிநேரத்திற்குள், 2 மில்லியன் பேர், எங்கள் நிறுவனம் வெளியிட்ட டீசரை
பார்த்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. வாரணம் ஆயிரம்
படம் வெளியானதற்கு பின், 6 ஆண்டுகள்
கழித்து, கவுதம் மேனனுடன், இசையமைப்பார் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து, இப்படத்திற்கு இசையமைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது என்று பர்வாணி கூறினார்.
No comments:
Post a Comment