Thursday, December 25, 2014

விமலைத் தொடர்ந்து ஆர்யாவும்!

ஆர்யா அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு படம்தான் மீகாமன். தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை
இயக்கியிருக்கிறார். ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் விஜயசேதுபதி-கிருஷ்ணா நடிப்பில் வெளியான வன்மம் படத்தை தயாரித்த நேமிசந்த் ஜெகப்தான் இந்த படத்தையும் தயாரித்திருக்கிறார்.
முந்தைய படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்பதால்,கையை கடித்து விட்டது. அதோடு, மீகாமன் பெரும்பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால், கடன் பிரச்சினையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாம். விசயம் ஆர்யாவின் காதுக்கு சென்றபோது, தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்த அவர், படத்துக்காக வாங்கப்படட பைனான்சையும் தனது சார்பில் இருந்து கொடுத்து படததை வெளியிடுவதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளாராம்.

இதற்கு முன்பு, கரு.பழனியப்பன் இயக்கத்தில் விமல் நடித்த ஜன்னல் ஓரம் படம் திரைக்கு வருகிற நேரத்திலும் இப்படித்தான் அப்படத்துக்கு பைனான்ஸ் கொடுத்தவர் கடைசி நேரத்தில் தனது பணத்தை பைசல் செய்தால்தான் படத்தை வெளியிட அனுமதிப்பேன் எனறு செக் வைத்தார். அப்போது அப்பட நாயகன் விமல் முன்வந்து தனது சம்பளமான தொன்னூறு லட்சத்தை முழுவதுமாக விட்டுக்கொடுத்து ஜன்னல் ஓரம் படம் வெளியாவதற்கு துணைபுரிந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது ஆர்யாவும் தனது மீகாமன் படம் வெளியாவதற்கு கைகொடுத்து தயாரிப்பாளர்களின் கஷ்டத்தில் பங்கெடுக்கும் நடிகர் பட்டியலில இணைந்திருக்கிறார்.

No comments:

Post a Comment