பொங்கல் அன்று எத்தனை படங்கள் வெளிவந்தாலும்
அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆம்பள
படத்தை வெளியிட்டே
தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்
விஷால். காரணம் ஆம்பள படத்தை ஆரம்பிக்கும்போதே பொங்கலுக்கு என வெளியீட்டு தேதியை
முடிவு செய்துவிட்டார்.
அரண்மனை
வெற்றிப் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கியுள்ள படம், பூஜை
வெற்றி படத்தை தொடர்ந்து விஷால் தயாரித்து நடித்துள்ள படம் இது என்பதால் நிச்சயம்
ஆம்பள படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று நம்புகிறார். தற்போது ஆம்பள
படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அத்துடன் பாடல் வெளியீட்டு
விழாவுக்கான ஏற்பாடுகளையும் ஆம்பள படக் குழுவினர் பரபரப்பாக செய்து வருகிறார்கள்.
விஷால் - சுந்தர்.சி. கூட்டணி அமைத்துள்ள ஆம்பள படத்தை பொங்கலையொட்டி வெளியிட
திட்டமிட்டுவிட்டதால் அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோவை வெளியிட
தீரமானித்துள்ளனர்.
அதன்படி வருகிற 27-ஆம் தேதி பிரம்மாண்டமான
விழாவில் ஆம்பள இசையை வெளியிட இருக்கிறார்கள்.
ஹிப் பாப் தமிழா ஆதி முதன் முதலாக இசை
அமைத்துள்ள படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு உண்டு! உண்மையில் இவர் இசையமைப்பாளராக
கமிட்டான முதல் படம் இன்று நேற்று நாளை படம்தான். விஷ்ணு நடிக்கும் இப்படத்தின்
பாடல்களைக் கேட்ட பிறகே தன் படத்துக்கு ஆதியை கமிட் பண்ணினாராம் விஷால். வேகத்தில்
தற்போது ஆம்பள படம் முந்திக்கொண்டுவிட்டது. ஆதியின் முதல் படம் என்ற பெருமையும்
கிடைத்துவிட்டது.
No comments:
Post a Comment