இணையம் வழி
வர்த்தகம் மேற்கொள்வதில், எப்படியும் முதல் வரிசை
இடத்தைப் பிடித்துவிட இந்திய வர்த்தக இணைய தள நிறுவனங்கள்
முடிவெடுத்துள்ளன. அதற்கான திட்டங்களின்
அடிப்படையில், சில நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, தங்கள்
வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிப்பதன் மூலம், முதல்
இடத்திற்கு வர முயற்சிக்கின்றன. இந்த வகையில் Flipkart,
Uber, redBus and OLX ஆகிய
நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. முடிவெடுத்துள்ளன. அதற்கான திட்டங்களின்
ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம், அனைத்து நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. எடுத்துக் காட்டாக, ப்ளிப் கார்ட் மற்றும் ஓ.எல்.எக்ஸ் நிறுவனங்கள் இணைப்பினைக் கூறலாம். தங்கள் பழைய பொருட்கள் விற்பனை செய்திட விரும்பும் வாடிக்கையாளர்களை ஓ.எல்.எக்ஸ் தளம் ஈர்க்கிறது. இவர்கள் புதிய பொருட்களை வாங்க, அவர்கள் ப்ளிப் கார்ட் தளத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். பொதுவாக, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிப் பல ஆண்டுகள் பயன்படுத்திய பின்னர், அவற்றை விற்றுவிட்டுத்தான், புதிய பொருட்களை வாங்க அனைவரும் விரும்புகின்றனர். இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு இதற்கு எளிதாக வழி காட்டுகிறது.
இதே போல, இணைய தளத்தில் பஸ் பயணிகள் டிக்கெட் பதிவு செய்திடும் தளமும்,வாடகை டாக்ஸி சேவை தரும் இணைய தள நிறுவனமும் இணைகையில், பயணம் முடிந்த பின்னர், இலவச டாக்ஸி சேவை தரப்படுகிறது. இது, பஸ் டிக்கட் பதிவதை அதிகரிக்கிறது.
இதே வரிசையில், ரியல் எஸ்டேட் தொழிலில் இயங்கும் காமன் ப்ளோர் தளம், வீடுகள் கட்டப்பட்டு வரும் இடங்களுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்ல, இலவச டாக்ஸி சேவையினைத் தர, குறிப்பிட்ட டாக்ஸி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இத்தகைய ஒப்பந்தங்கள், இந்தியாவில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது ஜப்பானில் கூட இது போன்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டது இல்லை.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இணையம் மூலம் வர்த்தகம் மேற்கொள்ள இருப்பவர்களின் எண்ணிக்கை 40 கோடியை எட்டும் என்ற கணிப்பின் அடிப்படையில்,தங்களுடைய வர்த்தகத்தினை அனைத்து வகைகளிலும் சிறப்பாக்கி,வாடிக்கையாளர்களுக்கு வசதி தர இந்த நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதில் இந்த வர்த்தக ஒப்பந்தங்களும் அடங்கும்.
No comments:
Post a Comment