Wednesday, September 24, 2014

லட்சுமி மேனனுக்கு பாட்டு ஆர்வம்!

கோலிவுட்டின் ஹிட் லிஸ்ட் நடிகை பட்டியலில் இருப்பவர் லட்சுமிமேன்ன. ஆனால் சித்தார்த்துடன் நடித்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் சரிந்து விட்டது போன்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதனால் சித்தார்த்துடன் நடித்த ராசி லட்சுமிமேனனின் மார்க்கெட் படுத்து விட்டதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால், இதுபற்றி லட்சுமிமேனனைக்கேட்டால், ஜிகர்தண்டா படத்தில் நடித்து வந்தபோது மலையாளத்தில் அவதாரம் உள்பட இரண்டு படங்களில் நடித்து வந்தேன். இதில் அவதாரம் ரிலீசாகி விட்டது. அதையடுத்து இன்னொரு படத்தில் நடித்து வந்தேன். அதனால் தான் தமிழ்ப்படங்களுக்கு கால்சீட கொடுக்க முடியவில்லை என்கிறார்.
மேலும், இப்போது தமிழில் என் கையில் கார்த்திக் நடிக்கும் கொம்பன், விஷால் நடிக்கும் படம் என இரண்டு புதிய படங்கள் உள்ளன. இது தவிரவும் சில படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் லட்சுமிமேனன். விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் டி.இமானின் இசையில் குக்குறு குக்குறு -என்றொரு பாடலை பாடியிருக்கிறேன்.

இந்த பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்றும் ஆண்டவனை பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்படி ஹிட்டாகும்பட்சத்தில் தமிழ், மலையாளத்தில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களை சந்தித்து பாடுவதற்கு சான்ஸ் கேட்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் லட்சுமிமேனன்.

No comments:

Post a Comment