Wednesday, September 24, 2014

பெண்ணை முத்தமிடும் வீடியோவில் இருப்பது நான் அல்ல: சிம்பு விளக்கம்

சிம்புவை பற்றி இணைய தளங்களில் அவ்வப்போது சர்ச்சை படங்கள் வருவது வழக்கமாக இருக்கிறது.
நயன்தாராவை முத்தமிடும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன.
தற்போது நட்சத்திர ஒட்டலில் இளம் பெண்ணை முத்தமிடுவது
போன்ற படம் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட மலையாள நடிகர்நடிகைகள் பலர் சென்று இருந்தார்கள். சிம்புவும் போய் இருந்தார். நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அந்த ஓட்டலில் தான் இந்த சர்ச்சை படம் பதிவாகி உள்ளது.
ஓட்டலில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்தபடி முத்தமிடுவது போல் அந்த வீடியோ படம் இருந்தது. உற்று பார்க்கும்போது அது சிம்புவை போல் இருப்பதாக கூறப்பட்டது. உடன் இருந்த பெண் திரைப்பட விருது விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஹர்ஷிகா என்று கூறப்பட்டது.
சிம்புவும் ஹர்சிகாவும்தான் முத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளனர் என்றும் ஓட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இது பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டது. அதை யாரோ இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அந்த வீடியோ போலியானது என்றும் சிம்பு தற்போது விளக்கம் தெரிவித்து உள்ளார். போலியான வீடியோ படத்துக்காக நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment