விஸ்வரூபம் 2 படம்
முடிவடைந்தும் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. இந்த காலதாமதத்திற்கு
இப்படத்தை தயாரிக்கும்
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தார்தான் காரணம் என்று
திரையுலகில் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ஐ படத்தையும்
தயாரித்துள்ள ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது ஐ படத்தை வெளிடும் முயற்சியில்
தீவிரமாக இறங்கி உள்ளது.
ஐ படத்தை வெளியிட்ட பிறகு
ஜெயம்ர ரவி த்ரிஷா நடித்த பூலோகம் படத்தை வெளியிட திட்டதிட்டுள்ளனர். நீண்ட
நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தினை விரைவில் ரிலீஸ் செய்யும்
வேலைகளில் அந்நிறுவனத்தினர் ஈடுப்பட்டுள்ளதால கமலின் விஸ்வரூபம் 2 படத்தினை பொங்கலுக்குவெளியிட
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது கமலின் விஸ்வரூபம் 2 அடுத்த ஆண்டு ஜனவரியில் அதாவது
பொங்கலுக்குத்தான் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 12 அன்று திரையிட
திட்டமிட்டிருந்த ரஜினியின் லிங்கா படத்தை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளதாக ஒரு
தகவல் திரையுலகில் பேசப்படுகிறது. ஆக.. பொங்கல் திருநாளில் கமல் ரஜினியின் படங்கள்
நேரடியாக மோத இருக்கின்றன. இதற்கிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து
வரும் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், தீபாவளியைவிட பொங்கல்
களைகட்டப்போகிறது.!
No comments:
Post a Comment