Saturday, October 25, 2014

பூஜை ஆந்திராவில் சூப்பர்ஹிட்

பல பிரச்சனைகளைத் தாண்டி வந்து, தீபாவளிக்கு வெளியான விஜய்யின் 'கத்தி' திரைப்படமும், விஷாலின் 'பூஜை' திரைப்படமும்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதோ அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி ரிலீசாக இந்த இரண்டு படங்களே வெளியாகியுள்ள காரணத்தினாலோ என்னவோ, இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் இருந்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விஜய்யின் 'கத்தி' முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சொல்லும் புள்ளி விவர கணக்கு கூறுகிறது. அதைப்போல விஷாலின் 'பூஜை' படமும் முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே பெரும் எதிர்ப்பிலும், எதிர்பார்ப்பில் வெளியானது 'கத்தி' படம்தான். அதனாலோ என்னவோ கத்தி படத்துக்கு செம ஓப்பனிங்.
கத்தி படத்தைப் போலவே விஷாலின் 'பூஜை' படமும் வசூலில் சாதனை படைக்கும் என்றே தியேட்டர் அதிபர்கள் தரப்பி கூறப்படுகிறது. விஷாலின் 'பூஜை' தமிழகத்தில் வெளியிட்டதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ஆந்திராவில் வெளியிட்டுள்ளனர். அங்கே பூஜா என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்களை விட ஆந்திரா ரசிகர்களிடையே 'பூஜா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான நேரடி தெலுங்குப்படங்களைவிட பூஜா படத்தின் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment