3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி என்ற ஒரே பாடல் அனிருத்தை இந்தியா முழுக்க பேச வைத்தது. அந்த
பாடலை கேட்ட இந்தி நடிகர்
அமிதாப்பச்சன்கூட அந்த பாடலில் ஏதோ புதுமை இருக்கிறது
என்று டுவிட் செய்திருந்தார். ஆக, முதல்
படத்திலேயே பிரபலங்களை ஈர்த்த அனிருத், எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களில்
ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் கத்திக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி
குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் இடம் பிடித்து விட்டார். அதோடு, விஜய் படம் மட்டுமின்றி, கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்திற்கும் இசையமைக்க கடுமையாக
முயற்சி எடுத்தார் அனிருத். ஆனால், கெளதம்மேனன் தனது செண்டிமென்ட் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்று
விட்டார். ஆனபோதும், ஏ.ஆர்.முருகதாஸ் அனிருத் மீது அதிக நம்பிக்கை வைத்து கத்தி படத்திற்கு
இசையமைக்க அவரை கமிட் பண்ணினார். ஆக, இந்த படம் கிடைத்ததால், தான் ஒப்பந்தமாகியிருந்த சில சின்ன
பட்ஜெட் படங்களில் இருந்து விலகிய அனிருத், தனது கவனத்தை சிதற விடாமல் கடந்த 3 மாத காலமாக கத்தி படவேலைகளிலேயே முழுசாக மூழ்கிக்கிடக்கிறார். அதோடு, உடனுக்குடன் பாடல்களுக்கு இசையமைத்து
கொடுத்து வந்த அனிருத், பின்னணி இசைக்கோர்க்கும் வேலைகளில் இரவு பகலாக ஈடுபட்டு தற்போது தனது வேலைகளை
முடித்து விட்டாராம் முக்கியமாக, கத்தியை ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் இருவரும் கூர்மையாக தீட்டி விட்டபோதும், தனது பங்குக்கும் தற்போது இசையால்
தீட்டியுள்ளாராம் அனிருத்.
No comments:
Post a Comment