'காஞ்சனா' மற்றும் 'அரண்மனை' போன்ற திகில் படங்களில், ராய் லட்சுமி நடித்திருந்தார்.
ஆனால் பேயாக
நடிக்கவில்லை. பேய்க்கு பயப்படும் வேடத்தில் தான்
நடித்திருந்தார்.தற்போது ஒரு படத்தில், பேய் வேடத்திலேயே நடிக்க கமிட்டாகி உள்ளார் ராய் லட்சுமி. இதுபற்றி அவர்
கூறும் போது, 'திகில்
படங்களை பொறுத்தவரை, பேய் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு தான் முதலிடம் தருவர். அவர்களை
சுற்றியே கதை செல்லும். அதனால், அப்படியொரு வேடத்தில் நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருந்த
போது தான், ஒரு இயக்குனர் மிரட்டலான ஒரு பேய் கதையை சொல்லி என்னை ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதனால், முதன்முறையாக பேயாக தோன்றி, மற்றவர்களை கதிகலங்க வைக்கப் போகிறேன்' என்கிறார்.
No comments:
Post a Comment