படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்ட
வேண்டும் என்ற தேடல் உடையவர் தான் சூர்யா.
இருப்பினும் சி
ங்கம், சிங்கம்-2 , அஞ்சான் மாதிரியான ஆக்சன் மசாலாப் படங்களில்
சமீபகாலமாக அவர் சிக்கிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அஞ்சான் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு
வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்த படம் இதுவரை சூர்யா
நடிக்காத வகையில் ஹரர் கதையில் உருவாகிறது. அதேபோல் சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய
வெங்கட்பிரபுவுக்கும் அந்த ஹரர் படம் புதிய அனுபவம்தான். இவரையும் பிரியாணி
கவிழ்த்து விட்டதால் இந்த முறை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அதனால் முன்பு
மாதிரி ஓவர் பில்டப் எதுவும் கொடுக்காமல் சத்தமில்லாமல் இந்த படத்தை
இயக்கிக்கொண்டு வருகிறார்.
முக்கியமாக ஐ படத்தில்
விக்ரமின் கெட்டப்பைப் பார்த்து அசந்து போன நடிகர்களில் ஒருவரான சூர்யா, இனிமேல் படத்துக்குப்படம் ஏதாவது
புதுமையான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அதனால் அவரது
முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் இந்த படத்தில் ஒரு டெரர் போன்ற கெட்டப்பில் அவரை
நடிக்க வைத்து வருகிறார் வெங்கட்பிரபு. இந்த கெட்டப்பை தீபாவளி தினத்தன்று
வெளியிட்டுள்ளனர்
அந்த கெட்டப், சேது, பிதாமகன் படங்களில் பார்த்த விக்ரமை
போன்று ஒரு டெரர் கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார் சூர்யா.
No comments:
Post a Comment