“அவர்களும்
இவர்களும்” என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து
சட்டப்படி குற்றம், விளையாடவா போன்ற படங்களில் சின்ன
கேரக்டர்களில் நடித்தார். அதையடுத்து அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினியாக
நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த படம் வெற்றி பெற்றதால் டைரக்டர்களின் கவனத்துக்கு
வந்தார்.
அதையடுத்து, விஜயசேதுபதி நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்து இப்போது பேசப்படும் நடிகையாகி விட்டார். அடுத்தபடியாக அட்டகத்தி தினேசுடன் திருடன் போலீஸ் மற்றும் இடம்பொருள் ஏவல், காக்கா முட்டை ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.
இதில் காக்கா முட்டை படத்தை டைரக்டர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்லம் ஏரியாவில் உள்ள இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார். இதுவரை நடித்த வேடங்களை விட இந்த வேடம் கதையை கேட்டபோது என் மனதை தொட்டது. அதனால் அந்த குடிசை மாற்று ஏரியா பெண்ணாகவே மாறி நடித்தேன் என்கிறார்.
இதற்கிடையே இம்மாதம் 16-ந்தேதி டொராண்டோவில் நடைபெறும் ரோம் திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரையிடப்படுகிறதாம். அதனால், இந்த படம் மூலம் எனது நடிப்பு உலக அளவில் செல்லயிருக்கிறது. அது மனதுக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது. அதனால் இதேமாதிரி உலக அளவில் திரையிடப்படும் வித்தியாசமான கதைகளில் நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த காக்கா முட்டை எனது கேரியரில் மிக மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்.
No comments:
Post a Comment