ஆண்ட்ரியா, ஹன்சிகா போன்ற
நடிகைகள், கவர்ச்சியை
கைவிட்டு, நடிப்புக்கு
முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க துவங்கியுள்ளதும், அதற்கு
ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதும், ப்ரியா ஆனந்தை, ரொம்பவே
யோசிக்க வைத்துள்ளது. 'எத்தனை நாளைக்கு தான், மரத்தையும், ஹீரோவையும் சுற்றி, சுற்றி வருவது' என, வருத்தப்படுகிறாராம்.
தன் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி
வருகிறார். 'நாலு படத்தில் நடித்தாலும், பெயர் சொல்லும் வகையிலான படங்களில்
நடிக்கணும்' என, கூறி வருகிறாராம். இதனால், தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும்
இயக்குனர்களிடம், 'எனக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக கூறுங்கள்' என்கிறாராம்.
No comments:
Post a Comment