Monday, November 17, 2014

எனக்கு வந்த வாழ்வா, சாவா பிரச்னையை தீர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய் நெகிழ்ச்சி

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசை அமைத்து, நடிக்கும் படம் இசை. சாவித்திரி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். சத்யராஜ் வில்லனாக
நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் "சினிமாவில் எனக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சனை எழுந்தபோது என்னை காப்பாற்றியவர் எஸ்.ஜே.சூர்யாதான்" என்று குறிப்பிட்டார்
மேலும் அவர் பேசியதாவது: "எனக்கு குஷிக்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் குஷி என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா சார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். குஷி ரீலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள் கதை என்ன இருக்கு?கதையே இல்லையே? என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். நண்பன் சமயம் இசைபடத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.".
தனுஷ் பேசியதாவது "நான் ப்ளஸ் ஒன் படித்த போது குஷி படம் ரோகினி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய்சார், சூர்யாசார் உடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையாக இருக்கிறது. சூர்யாசார் பேசுவதே பாடுவது மாதிரி இருக்கும், அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவரது படங்களில் அவரது இசைஞானம் தெரியும்.அவர் படப்பாடல்களைக் கேட்டால் கேட்டு வாங்கியது தெரியும். இன்றைக்கு ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார். ."என்றார்.
ஏ.ஆர். முருகதாஸ் பேசியதாவது " எஸ்.ஜே.சூர்யா சாரைப் பற்றிப் பேசும் போது சீரியல் அளவுக்குப் பேச முடியும். 17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. குஷி படத்தில் அவருடனும் விஜய் சாருடனும் வேலை பார்த்ததை கணக்கு பார்த்தால் கத்தி எனக்கு விஜய் சாருடன் மூன்றாவது படம். கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யாசாரின் திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போது அவரை மனதில் வைத்துக் கொண்டு தான் உருவாக்குவேன். அவரது இசையார்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார்.பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு தானே பாடுவார். இவ்வாறு முருகதாஸ் பேசினார்.
விழாவில் ஷோபா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஷ்ணு வர்தன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


No comments:

Post a Comment