அங்காடித்தெரு அஞ்சலி, சினேகா வரிசை நடிகையாக வேண்டியவர். ஆனால், சரியான கதைகள்
கிடைக்காததால் அவரும் ஒரு கட்டத்தில்
கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை
களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு
அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரமாக இருந்தது.
அதனால் அடுத்தடுத்து
அஞ்சலியின் பிரவேசம் இன்னும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நேரம்தான், அவரது கேரியரில் ஒரு தேக்க நிலை
ஏற்பட்டது. இருப்பினும், தற்போது தட்டுத்தடுமாறி, ஜெயம் ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் எழுந்து நிற்கிறார் அஞ்சலி. இதையடுத்து, பழைய ஞாபகத்தில் சில டைரக்டர்கள் அவரை
மீண்டும் கவர்ச்சிக்கோதாவில் இறக்கிவிடும் நோக்கத்துடன் அணுகியபோது, அதற்கு மறுத்து விட்டாராம்.
இந்த சினிமாவில் நான்
நீண்டகாலம் நிலைக்க ஆசைப்படுகிறேன். அதனால் இனி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்தே
நடிக்கப்போகிறேன். அதேசமயம், காமெடியில் அதிக ஆர்வம் காட்டப்போகிறேன். இதற்கு முன்பு நான் நடித்த சில
படங்களிலும் காமெடி காட்சிகளில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். அதை அப்பாடக்கர்
படத்தில் தொடர்ந்திருக்கிறேன். அதோடு, அடுத்தபடியாக விமலுடன் நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம் படததிலும் எனக்கு காமெடி
காட்சிகளும் உள்ளது. அதனால், காதல், காமெடி என இரண்டுவிதமான நடிப்பையும் அந்த படத்தில் கலந்து கட்டி நடித்து, என் மீது விழுந்த கவர்ச்சி இமேஜை
மாற்றப்போகிறேன் என்கிறாராம் அஞ்சலி.
No comments:
Post a Comment