Monday, November 17, 2014

கவுண்டமணியின் பாணியை கையிலெடுத்த சிங்கம்புலி!

சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார்
சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான் நடிக்கிறேன் என்று இப்போதுவரை உடன்படாமலேயே இருந்து வருகிறார். அதோடு, தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேணடும் என்பதற்காகவும் சமீபகாலமாக வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமின்றி உடல்மொழி காமெடிகளையும் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் சநதானம்.

இந்தநிலையில், கவுண்டமணிதான் என்னை கவர்ந்த காமெடியன். அதனால் அவர் பாணியில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று சொலலிக்கொண்டு, அவர் சாயலில் காமெடிகளை உதிர்த்து வருகிறார் சிங்கம்புலி. அதனால் தற்போது ஷோலோ காமெடியனாக தான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் வரும்போது கவுண்டமணி எந்த மாதிரி லொள்ளு காமெடிகளை பேசி நடிப்பாரோ அந்த பாணியில் தானும் நடித்து வருகிறார்.


சில சமயங்களில் டைரக்டர்கள் கொடுக்கும் காமெடி டயலாக்குகள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லாமல இருந்தால், தானும் சில டயலாக்குகளை எழுதி காட்சிகளை கவுண்டமணி பாணிக்கு திருத்தம் செய்து கொள்கிறார். இப்படி தற்போது நடித்து வரும சில படங்களில் இந்த பாணியை அமுல்படுத்தியிருக்கும் சிங்கம்புலி, அப்படி தான் நடித்ததில் இர்பானுடன் நடித்துள்ள பொங்கி எழு மனோகரா படம்தான் முதலில் திரைக்கு வருகிறது. அதற்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் ஆதரவினை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment