தமிழ்நாட்டு நடிகர்களில்
விஜய்க்குத்தான் கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில்
விஜய் படங்கள் வெளியாகும்போது
எப்படி கட்அவுட், போஸ்டர் என்று
ஆரவாரம் செய்கிறார்களோ அதேபோல் அங்கேயும் நடக்கிறதாம். அந்த வகையில், விஜய் நடித்து வெளியான கத்தி படம் கேரளாவில்
மொத்தம் 200 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
அதோடு இதுவரை அவர் படங்கள் செய்த வசூலையும்
இந்த படம் முறியடித்துள்ளதாம். அதனால் அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள்
கேரளாவில் இன்னும் அதிக வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்
அவரையடுத்து சூர்யா மற்றும் தனுஷ் படங்களுக்கும் அங்குள்ள ரசிகர்கள் பலத்த
வரவேற்பு கொடுக்கிறார்களாம்.
அதனால், தற்போது தனுஷ் நடிப்பில்
வெளியாகயிருக்கும் அனேகன் படத்தை கேரளாவில் அதிக தியேட்டர்களில்
வெளியிடப்போகிறார்களாம். விஜய் படங்களுக்கு இணையாக இல்லையென்றாலும் ஒரு 100 தியேட்டர்களிலாவது
வெளியிட்டு தனுஷின் கேரளா மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தப்போகிறார்களாம்.
அதோடு, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிற்கும் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களை
சந்திக்கும் ஐடியாவும் வைத்திருககிறாராம் தனுஷ்.
No comments:
Post a Comment