ஷங்கர் இயக்கத்தில்
விக்ரம் நடித்துள்ள ஐ படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாம்.
ராஜபாட்டை தோல்விக்குப்பிறகு சரியான படம் கிடைக்காமல் அவர் தடுமாறிக்கொண்டு
நின்றபோதுதான் ஷங்கரின் அழைப்பு வர, உடனடியாக அந்த
படத்தில் கமிட்டாகி இரண்டு வருடங்களாக பயணித்தார் விக்ரம். அதோடு, அவரது திறமைக்கு தீனி போடும் மாறுபட்ட
கதைக்களம் என்பதால், இதுவரை சேது, காசி, அந்நியன் என
பல படங்களுக்கு ரிஸ்க் எடுத்து நடித்தபோதும், அந்த
படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம்.
அதனால் இதன்பிறகு பாலிவுட், ஹாலிவுட்
படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் விக்ரமை முற்றுகையிடும் என்றொரு கருத்தும்
நிலவி வருகிறது.
இந்தநிலையில், ஐ
படத்தில் நடித்து முடித்த வேகத்தில் 10 எண்றதுக்குள்ள
படத்தில் நடிக்கத் தொடங்கிய விக்ரம் இப்போது அப்படத்தின் இறுதிகட்டத்தை
எட்டிவிட்டார். இன்னும் ஒரு பாடல் மற்றும் குறைவான வசன காட்சிகள் மட்டுமே
படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அதனால், டிசம்பருக்குள்
அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள்.
ஆக, அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே 10
எண்றதுக்குள்ள படம் திரைக்கு வர தயாராகி விடுமாம். இந்த நிலையில்,
இறுதிகட்ட பணிகளில் இருக்கும் ஐ படம் டிசம்பரில் வெளிவராது என்கிற
நிலையில், அந்த படமும் அடுத்த ஆண்டுதான் திரைக்கு வருவதற்கான
சூழ்நிலைகள் உள்ளன. இருப்பினும், ஐ திரைக்கு வரும்போது
விக்ரமின் மார்க்கெட் இன்னும் எகிறும் என்பதால், அப்படத்திற்கு
பிறகே 10 எண்றதுக்குள்ள படத்தை வெளியிட
திட்டமிடப்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment