Monday, January 5, 2015

சிரஞ்சீவியின் அழைப்புக்கு காத்திருக்கிறாரா ஷங்கர்...!!!

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டரான சிரஞ்சீவி நடிக்கப் போகும் 150வது படம் பற்றிய அறிவிப்பிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்
அவருடைய பிறந்த நாளன்றே அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதற்கு முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சிரஞ்சீவிக்குப் பலரும் கதை சொல்லி வருகிறார்களாம். இருந்தாலும் அவருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இதுவரை எந்தக் கதையும் அமையவில்லையாம். எப்படியும் இந்த ஆண்டிலாவது சிரஞ்சீவியின் 150வது படத்தை முடித்து வெளிட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்
இதனிடையே, '' படத்தின் வெளியீட்டு வேலைகளை முடித்த பின் ஷங்கர், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொல்லப் போவதாக டோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. அது குறித்து, சிரஞ்சீவிக்கும் ஷங்கர் செய்தி அனுப்பியுள்ளதாகவும், '' படம் வெளியான பின் அவர்களிருவரின் சந்திப்பு நடைபெறும் என்றும் சொல்கிறார்கள். ஷங்கர் இயக்கப் போகும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான் ஆர்வமாக உள்ளார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் சிரஞ்சீவியும் சேர்ந்துள்ளார். ஆக, ஷங்கர் அடுத்து கண்டிப்பாக ஒரு பெரிய நட்சத்திரத்துடன்தான் இணையப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


No comments:

Post a Comment