கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் பாடல்கள் வெளிவந்து பல வாரங்களாகின்றன.
அவற்றில் டங்கா மாரி சோமாரி என்ற பாடல் ஹிட்டாகியும்
உள்ளது. நான்கு வித தோற்றங்களில் தனுஷ் நடித்த காட்சிகளுடன் கூடிய ஃபர்ஸ்ட்
லுக்
டீஸரும் வெளிவந்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட வேலைகள்
அனைத்தும் முடிவடைந்து, அனேகன் படம்
சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழும் வாங்கிவிட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும்
சஸ்பென்ஸாகவே இருக்கிறது. எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை.
கடந்த வருட தீபாவளிக்கே அனேகன் படம் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது.
லிங்காவுக்காக வழிவிட்டு ஒதுங்கியது. பிறகு பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டது.
அனேகன் இப்போது பொங்கல் ரேஸிலும் இல்லை. அது மட்டுமல்ல ஜனவரி ரிலீஸ் ஆகும்
படங்களின் பட்டியலில் கூட இல்லை. சென்சார் செய்யப்பட்ட பிறகு அனேகன் படத்தை
வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?
ஐ படத்தின் சென்னை, செங்கல்பட்டு உரிமையை அனேகன்
தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனத்தார் வாங்கியிருப்பதுதான் முதல் காரணம். தற்போது
அவர்களின் முழுக்கவனமும் ஐ பட வெளியீட்டில் இருப்பதால், அப்படம் வெளியாகி சில வாரங்களுக்குப்
பிறகே அனேகன் படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கேள்வி.
ஐ படம் வெளியான சில
நாட்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியாக உள்ளது. அந்தப்படத்துக்கு
போட்டியாக இறக்கினால் அனேகன் படம் காணாமல்போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறதாம்
தயாரிப்பு தரப்பு. தான் நடித்த படம் மற்ற ஹீரோக்களின் படத்துக்காக வழிவிட்டு
ஒதுங்கி நிற்பதை அனேகன் படத்தின் ஹீரோவான தனுஷ் விரும்பவில்லையாம்... இது குறித்து
ஏஜிஎஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனாவுக்கு போன்போட்டு காய்ச்சி
எடுத்துவிட்டாராம் தனுஷ்.
No comments:
Post a Comment