Thursday, January 8, 2015

உதயநிதி ஸ்டாலினின் சூப்பர் ப்ளான்!

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த புராஜக்ட்டுகளை இறுதி செய்வதோடு, அதன் வேலைகளையும் ஆரம்பித்து வைத்துவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி நண்பேன்டா
படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் நண்பேன்டா படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். வழக்கம்போல் இப்படத்திலும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து காமெடி பண்ணி இருக்கிறார் உதயநிதி.
 ஆபீஸ் உட்பட பல சீரியல்களில் நடித்த சின்னத்திரை நடிகை சூசன் இந்தப்படத்தில் நெகட்டிவ் கேரட்ரில் நடித்திருக்கிறார். சிறப்பத் தோற்றத்தில் அதாவது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறாராம் நடிகை தமன்னா. காதல் கலந்த இந்த காமெடி படத்தை ஜெகதீஷ் இயக்குகிறார். நண்பேன்டா படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வரிசையாக பல பெரிய படங்கள் ரிலீஸாகவிருப்பதால், நண்பேன்டா படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட இருக்கிறார் உதயநிதி.
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள காமெடிப் படம் என்பதால் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்வதுதான் நல்லது என்று நினைக்கிறாராம். இதற்கிடையில் கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.


No comments:

Post a Comment