Tuesday, October 14, 2014

3 ஹீரோயினுக்காக ஒரு நாளுக்கு ரூ. 1 லட்சம் வாடகையில் பங்களா

சென்னை: 3 ஹீரோயின்கள் நடிக்கும் சுற்றுலாபடத்துக்காக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாடகை கொடுத்து ப
ங்களா எடுக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் ராஜேஷ் ஆல்பிரட் கூறியதாவது:மலைப்பிரதேசத்தில ஆடம்பர பங்களாவில் வாழும் இளைஞன் தனது குணத்தை இருவிதமாக வெளிப்படுத்துகிறான். இதனால் ஏற்படும் அடுக்கடுக்கான சம்பவங்கள்தான் கதை. முதன்முறையாக இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். முக்கிய வேடத்தில் மிதுன் நடிக்கிறார். ஹீரோயின்களாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா நடிக்கின்றனர். மற்றும் ஜெகன், சிங்கமுத்து, ஜாக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க ஊட்டியிலேயே இதன் ஷூட்டிங் நடந்தது. இதற்காக, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் என்று வாடகை பங்களா எடுக்கப்பட்டது. அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ரவிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட்ராம், ரவிகுமார் தயாரிக்கின்றனர். பரணி இசை அமைக்கிறார்.

No comments:

Post a Comment