சென்னை: கணவர்
பஹத் பாசில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் ஒட்டிக்கொண்டு சென்று பொழுதை
கழிக்கிறார் நஸ்ரியா. மலையாள
நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா
நாசிம் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. நடிக்கும்போது வெளியூர்
ஷூட்டிங், ஆடியோ விழா என
பறந்துகொண்டிருந்த நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி
இருப்பதால் காலை கட்டிப்போட்டது போல் வீட்டையே சுற்றி சுற்றி
வந்துக்கொண்டிருக்கிறார். கணவரை உடனிருந்து கவனித்துக்கொள்ளும்படி உறவினர்கள்
அறிவுரை கூறியதையடுத்து பஹத் பாசில் வேலை விஷயமாக வெளியே செல்லும் போது அவரது
தேவையை பூர்த்தி செய்வதற்காக நஸ்ரியாவும் உடன் செல்கிறார். உணவு பரிமாறுவதுமுதல்
அவரது ஷூட்டிங் விஷயங்கள் உள்ளிட்டவரை ஒரு பி.ஏ.போல் உடனிருந்து
கவனித்துக்கொள்கிறார். கோழிக்கோடில் நடந்துவந்த மலையாள பட ஷூட்டிங் அடுத்து
பெங்களூரில் நடக்க உள்ளது. அவருடன் நஸ்ரியாவும் பெங்களூருக்கு ஜோடிபோட்டு
புறப்பட்டுவிட்டார். இப்படத்தில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடிக்கிறார்.
நடிப்புக்காக தான் படித்து வந்த பி.காம் பட்டப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி
இருந்தார் நஸ்ரியா. தற்போது அதை முடிக்க எண்ணி உள்ளார்.அதற்கான புத்தகங்களும்
வாங்கியவர் படிப்பிலும் தனது கவனத்தை செலுத்துகிறாராம். நடிப்பு எப்போது என்று
கேட்டால் அதுபற்றி பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
No comments:
Post a Comment