கத்தி
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அப்படத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக பிரஷர் அதிகமாகி இ
ருக்கும். ஜெயலலிதாவின்
சிறைவாசத்தினால்
அரசாங்கத்தினால்
படத்துக்கு சிக்கல் வராது என்கிற நம்பிக்கையில், திட்டமிட்டபடி கத்தி படத்தை திரைக்குக் கொண்டு
வந்துவிட வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸும், லைகா புரொடக்ஷனும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
அதோடு,படத்துக்காக
புரமோஷன்களை பெரிய அளவில் செய்ய வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கத்தி படத்தின் பின்னணி இசை சேர்க்கும் பணியை அனிருத் திட்டமிட்டபடி
முடிக்கவில்லையாம். அதனால், அதிர்ச்சியான ஏ.ஆர்.முருகதாஸ், டம்மியான மியூசிக் ட்ராக்கை வைத்து சென்சார்
சர்ட்டிபிகேட் வாங்கவிட்டார்.
சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்துவிட்டதால், தற்போது கத்தி பின்னணி இசை வேலை நிதானமாக
நடைபெற்று கொண்டிருக்கிறது... இது ஒரு பக்கம் இருக்க, ஜில்லா படத்தை பொங்கலுக்கு முன்னதாக
வெளியிட்டதுபோல், கத்தி படத்தை தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான
அக்டோபர் 17ஆம் தேதியே வெளியிட வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டாராம். அவரது
ஆலோசனையை ஏற்று கத்தியை தீபாவளிக்கு 5 நாட்கள் முன்னதாக வெளியிட லைகா புரடக்ஷன்ஸ்
தீர்மானித்திருப்பதாக தகவல் அடிபடுகிறது. இது குறித்து, கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான
கருணாமூர்த்தியிடம் கேட்டபோது, அப்படி எந்த எண்ணமும் இல்லை. திட்டமிட்டபடி தீபாவளி
அன்றுதான் ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment