Tuesday, October 14, 2014

சமந்தா, சார்மி ஒரே பாடலுக்கு நடனம்!

சிலம்பரசன் நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை'படத்தில் நாயகியாகஅறிமுகமானவர் சார்மி. அதன் பின் ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசுஆகிய
படங்களில் நாயகியாக நடித்தார். இங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். அங்கு ஏறக்குறைய எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம்சமந்தா நடித்து வரும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே'படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.அந்தப் பாடலில் சார்மியுடன் சமந்தாவும் சேர்ந்து நடனமாட உள்ளாராம். சுமார் 9 நிமிடப் பாடலான அந்தப் பாடலைப் படமாக்க புனே அருகில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம். அந்தப் பாடலுக்காக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்க இருக்கிறார்களாம். விஜய் மில்டன் இதற்கு முன் இயக்கிய'கோலி சோடாபடத்தின் பட்ஜெட்டே சில லட்சங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றி கிடைத்தபின் பிரம்மாண்டத்தின் பின் நமது இயக்குனர்கள் செல்வது வழக்கமாகிவிட்டதையே இது காட்டுகிறது. 'கோலி சோடா'படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு நல்ல வசூலைக் குவித்த படமாக அமைந்து இயக்குனர்விஜய் மில்டனுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஏற்கெனவே, 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தைப் பற்றி வெளிவரும் சில விஷயங்கள் 'பற்றிக்' கொள்ளும் விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பத்து எண்ணி முடிப்பதற்குள் இன்னும் பல விஷயங்கள் 'பற்றிக்'கொள்ளும்படி வெளிவர வாய்ப்புள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.


No comments:

Post a Comment