Friday, October 10, 2014

கோலிவுட்டை கலக்கும் கன்னட கிளி நிகிஷா

என்னமோ ஏதோ, தலைவன் படங்ளில் நடித்த நிகிஷா பட்டேல் தமிழ் கன்னட படங்களில் பிசியாக நடித்துக்
கொண்டிருக்கிறார். தமிழில் நகுலுடன் அவர் நடித்துள்ள காமெடி படமான நாரதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. சுடிகாடு கதா என்ற தெங்கு படத்தின் ரீமேக் இது. மணிசர்மா இசை அமைத்துள்ளார். இந்த மாதம் பாடல்களையும், அடுத்த மாதம் படத்தையும் வெளியிடுகிறார்கள். இன்னும் 3 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர நிகிஷா நடித்த கன்னட படமான நமஸ்தே மேடம் வருகிற 24ந் தேதி ரிலீசாகிறது. இது தெலுங்கு படமான மிஸ்ஸம்மாவின் ரீமேக். இதுதவிர ஆலோன் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இரண்டு கன்னட படங்களில் நடிக்க இருக்கிறார்.
"நான் கிளாமர் கேரக்டர்களில் மட்டும் நடிப்பதாக நினைக்கிறார்கள். எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்கிறேன். நாரதன் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். எந்த கேரக்டரையும் சவாலாக எடுத்துக் கொண்டு நடிக்கிறவள் என்கிற பெயரை எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் நிகிஷா.

No comments:

Post a Comment