ரீ-என்ட்ரியிலும் செம கலக்கு
கலக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. ஆரம்பம், ராஜா ராணி
படங்களின் வெற்றி அவரை பிசியாகி
விட்டிருக்கிறது. அதிலும் வித்யாபாலன் நடிப்பில் வெளியான கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா படத்தில் நடித்த பிறகு நயன்தாரா மீது இயக்குனர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது.
அதனால்தான் தற்போது இது நம்ம ஆளு, நண்பேன்டா படங்களில் வழக்கமான கதைகளில் நடித்தபோதும், ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனி ஒருவன், ஆரியாவுடன் நடிக்கும் நைட் ஷோ ஆகிய படங்களில் வெளியிட்டான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் நயன்தாரா. தனி ஒருவன் படத்தைப் பொறுத்தவரை பிரத்யேக சண்டை பயிற்சியெல்லாம் எடுத்து நடித்து வருகிறார். அவருக்கும், ஜெயம்ரவிக்குமிடையே கூட சண்டை காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், நைட் ஷோ படத்தில் ஆக்சன், த்ரில்லர் கதையில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட அனாமிகா படத்தில் நடித்தது போன்று வெயிட்டான வேடத்தில் நடித்துள்ள நயன்தாராதான் இந்த படத்தில் பிரதான ரோல் செய்திருக்கிறார். அதனால் அவரது கேரியர் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக தனது நடிப்பில் இது நம்ம ஆளு, நண்பேன்டா, நைட் ஷோ, தனி ஒருவன், மாஸ் என வரிசையாக படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வர இருப்பதால் செம உற்சாகத்தில் இருக்கும் நயன்தாரா, மேலும் புதிய படங்களில் கமிட்டாவதற்கும் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.
No comments:
Post a Comment