இந்த
பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிமையாக பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி பேண்ட் மட்டும்
இருந்தால் போதுமானது. பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில் (படம் Aயில் உள்ளபடி) மாட்டி ஒரு பக்கத்தை இடது கையால் பிடித்து கொள்ளவும்.
இருந்தால் போதுமானது. பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில் (படம் Aயில் உள்ளபடி) மாட்டி ஒரு பக்கத்தை இடது கையால் பிடித்து கொள்ளவும்.
மற்றொரு
முனையை வலது கையால் வயிற்றின் அருகில் பிடித்து கொள்ளவும். இப்போது உடற்பயிற்சி
பேண்ட் ‘ V’ போன்ற வடிவத்தில் இருக்கும். வலது காலை
முட்டி வரை மடக்கி வைக்கவும். இப்போது வயிற்று பக்கம் உள்ள வலது கையை அசைக்காமல்
உடற்பயிற்சி பேண்ட்டை பிடித்துள்ள இடது காலை மெதுவாக படம் Bயில் உள்ளபடி இடுப்புக்கு நேராக நீட்டவும்.
காலை மடக்க
கூடாது. சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே
போல் இடது பக்கம் 20 முறை செய்யவும்.
பின்னர் கால்களை மாற்றி வலது காலுக்கும் செய்ய வேண்டும். கால்களை நீட்டும் போது
நேராக வருவதற்கு உடற்பயிற்சி பேண்ட்டை சரிசெய்து கொள்ளலாம்..
ஆரம்பத்தில் 20 முறையும் அதன் பின்னர் படிப்படியாக
எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும், அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சி
தொப்பை குறைவதற்கும், கால்களுக்கு
வலிமையும் தரக்கூடியதாகும்..
No comments:
Post a Comment