Wednesday, October 29, 2014

நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணமில்லை!- விஷால்

சமீப காலமாகவே நடிகர் விஷால், நாசர் மற்றும் சில இளவட்ட நடிகர்களுடன் இணைந்து கொண்டு நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு
எதிராக போர்க்கொடி பிடித்து வருவது போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதோடு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க கூட்டம் நடந்தபோதுகூட, அன்றைய தினத்தில் விஷால்தரப்பினர் காரசாரமாக பேசுவார்கள். அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டது.
 ஆனால், அப்படி எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அந்த கூட்டம் சுமூகமாகவே நடந்து முடிந்தது. இந்த நிலையில், நடிகர் சங்கம் உள்ள பகுதியில் வியாபார வளாகம் வரக்கூடாது என்றும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் விஷால், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பணத்தை ஜெயம் ரவி, ஜீவா, சந்தானம், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்டோர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நடிகர் சங்க புதிய கட்டிடத்தை கட்டலாம் என்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.
 இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், மற்ற நடிகர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை விஷாலுக்கு மட்டும் ஏன் வருகிறது? என்று ஒரு கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் பூஜை படத்தின் ப்ரமோஷன் சம்பந்தமாக நிருபர்களிடம் விஷால் கூறுகையில், நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. நல்ல முறையில் வழிநடத்த அனைத்து நடிகர், நடிகைகளும் முன்நிற்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று தெரிவித்துள்ளார் விஷால்.


No comments:

Post a Comment