Wednesday, October 29, 2014

மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!

தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். மலையாளத்தில் ஏராளமான
படங்களில் நடித்துள்ள இவர், கடுகளவுகூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்ற கண்டிசனோடுதான் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறார். அதனால்தான் தமிழில் குறைவான படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.
 இந்த நிலையில், த்றபோது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும் என்று தன்னை சந்திப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறார். காரணம், இந்த படத்தில் மனதை தொடும் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு மீராநந்தனுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாம்.
அதனால் கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் முக்கிய இடம்பிடித்துள்ள நயன்தாரா, அமலாபால், மீராஜாஸ்மின், லட்சுமிமேனன் உள்ளிட்ட நடிகைகள் வரிசையில் இந்த படத்திற்கு பிறகு நானும் ஒரு முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் மீராநந்தன்.

 அவரிடத்தில், சரத்குமார் போன்ற வயதான ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்களே. அடுத்து இளவட்ட ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்டால், இப்போதெல்லாம் அப்படி யாரும் பார்ப்பதில்லை. ஏற்கனவே நான் மலையாளத்தில் லோக்பால் என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். ஆனால் அதையடுத்தும், ப்ருத்விராஜ், பஹத்பாசில் என இளவட்ட நடிகர்களுடனும் நடித்துதான் வருகிறேன். அதனால், மலையாளத்தை போலவே தமிழிலும என்னை யாரும் ஓரங்கட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மீராநந்தன்.

No comments:

Post a Comment