தமிழில் ஆட்டோகிராப்,
கனா
கண்டேன்,
எம்டன்
மகன்,
வீராப்பு,
வெள்ளித்திரை
உள்பட பல படங்களில் நடித்தவர் கோபிகா. கேரளத்து
நடிகையான இவர்,
தமிழில்
நடித்தது குறைவான படங்கள் என்றாலும், தனக்கென
ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, கடைசி
வரை ஹோம்லியாக மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் அஜிலேஷ் ஜாக்கோ என்பவரை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து, எமி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த கோபிகா. மலையாளத்திலும் இரண்டு படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்தார்.
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமான கோபிகா, சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு ஆஸ்திரேலியாவிலேயே இருந்து வந்தார். நேற்று காலை அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து தாயும், சேயும் நலமாக இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment