Saturday, October 18, 2014

இரண்டு ஜோடிகளுடன் கார் ரேஸ் சாம்பியனாக நடிக்கிறார் பிரேம்ஜி!

பிரேம்ஜி இப்போது மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இசையும் அவர்தான்
படத்தின் பெயர் டக்கர். (ஜெயம்ரவி நடிக்கும் படத்தின் பெயர் அப்பாடக்கர்).

இதில் பிரேம்ஜி கார் பந்தைய வீரராக நடிக்கிறார். அவருக்கு மீனாட்சி தீக்ஷித், அருந்ததி என்ற இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள். பெங்களூர் நகரம், அந்தமான் காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. (என்ன கொடுமை சார் இது)


விடிவி கணேஷ், ஜான் விஜய், ஜெயபிரகாஷ் தேவதர்ஷினி நடிக்கிறார்கள். கங்கை அமரனும், வெங்கட் பிரபுவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். பாண்டிய நாடு பட வில்லன் சரத் இதில் வில்லனாக நடிக்கிறார். மதில்மேல் பூனை படத்தை இயக்கிய ஜெயபால் இயக்குகிறார்.

No comments:

Post a Comment