கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை
முறையில் தயாரித்து பொருத்துகின்றனர். ஆனால், அவை மற்ற உடல்
உறுப்புகளுடன் இணைந்து
இயற்கையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது. ஆனால், சுவீடனின் கோதன் பர்க், சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்லைக்கழக விஞ்ஞானி மாஸ் ஆர்டிஷ் கடாலன் செயற்கை கை
தயாரித்துள்ளார். இது ரோபோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கெனவே உள்ள
துண்டிக்கப்பட்ட கையுடன் இணைந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இந்த கையை
மேக்னஸ் (42) என்ற சரக்குந்து ஓட்டுநருக்கு பொருத்தியுள்ளனர்.
விபத்தில் அவர் தனது வலது
கையை இழந்தார். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள ரோபோ கைமூலம் அவர் லாரி ஓட்டுகிறார். வீட்டில்
தனது அன்றாட பணிகளையும் செய்கிறார்
இந்த செயற்கை கை மின்
முனைகளால் (எலெக்ட் ரோட்களால்) உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தப்படும்
பகுதியில் உள்ள தோலின் மேற்பரப்பில் ஊடுருவி நரம்பு மண்டலத்தில் அதிர்வலைகளை
ஏற்படுத்தி மூளைக்கு தெரிவிக்கின்றன.
ரோபோ கை பொருத்தி தனக்கு
மீண்டும் வாழ்வளித்த விஞ்ஞானிகளுக்கு மேக்னஸ் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வகையான
ரோபோ கை பொருத்தப்பட்ட முதல் மனிதர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்
No comments:
Post a Comment