Saturday, October 18, 2014

நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாததினால், மன நெருக்கடியில் சிம்பு!

என்ன ஆச்சோ ஏற்கனவே ஒப்புக்கொண்டு நடித்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை....புதுப்பட ஒப்பந்தங்களும் இல்லை....எனவே கடும்
மன நெருக்கடியில் இருக்கிறாராம் சிம்பு. இதேநிலை நீடித்தால், தன்னுடைய கேரியர் எதிர்காலத்தில் என்னாகும் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறதாம். சிம்பு படம் வெளிவந்து சுமார் இரண்டு வருடங்களாகிவிட்டன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கடந்த 2013 ஆம் வருடம் வெளியானது.

இந்த வருடம் மீண்டும் கெஸ்ட் ரோலில் அவர் நடித்த இங்க என்ன சொல்லுது படமும் வெளிவந்தது. இந்த மூன்று படங்களில் போடா போடி, இங்க என்ன சொல்லுது அட்டர் ப்ளாப் படங்கள். இப்போது விஜய் சந்தர் இயக்கத்தில் வாலு, பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு, கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்று என மொத்தம் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. என்றாலும் இந்த 3 படங்களுமே எப்போது வெளி வரும் என்பது சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கே தெரியாதநிலை உள்ளது

வாலு படத்தில் ஒரே ஒரு பாடலும், இது நம்ம ஆளு படத்தில் 3 பாடல்களும்தான் பாக்கி... மற்றபடி டாக்கி போர்ஷன் என்கிற வசனக்காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக சிம்பு சொல்லி வருகிறார். இந்த 4 பாடல்களையும் எடுத்து முடித்துவிட்டால் வாலு, இது நம்ம ஆளு ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகிவிடும். தற்போது அஜித்தை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் தல 55 படம் முடிவடைந்ததும் சிம்பு நடிக்கும் படத்தை துவங்கவிருக்கிறாராம் கௌதம் மேனன். அனேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் துவங்கலாம்!

No comments:

Post a Comment