Sunday, November 2, 2014

காக்கிச்சட்டை தலைப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்த்தின் தலைப்பு டாணாவா? காக்கிச்சட்டையா? என்றுகடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பட்டிமன்றம் முடிவுக்கு வந்துவிட்டது.
காக்கிச்சட்டை என்ற டைட்டிலை இறுதி செய்திருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு முதலில் டாணா என்பதே தலைப்பாக இருந்தது. பின்னர் காக்கிச்சட்டை என்ற பெயர் அடிபட்டு வந்தது.
ஆனால் அதிகாரபூர்வமாக காக்கிச்சட்டை பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமலே இருந்தது.
1985 ஆம் ஆண்டு வெளிவந்த கமலின் காக்கிச்சட்டை படத்தை தயாரித்தது சத்யா மூவிஸ்.
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனிடம் அனுமதி பெற்று தற்போது காக்கிச்சட்டை தலைப்பை அறிவிக்க உள்ளனர். இந்த தலைப்பு கிடைக்க கமல் உதவி செய்தாராம். எனவே,காக்கிச்சட்டை டைட்டிலை என் படத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுத்த உலகநாயகனுக்கும், சத்யா மூவிஸ் நிறுவனத்துக்கும் நன்றி என்று ட்விட்டரில் தனது நன்றிகளை தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தனுஷ் தயாரிக்கும் இப்படத்தில் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் மதிமாறன் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் விவிஎஸ் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. திவ்யா என்பதுதான் இப்படத்தில் அவரின் கேரக்டர் பெயராம். கூடவே சிவா படத்தில் முதல்முறையாக காமெடிக்கு இமான் அண்ணாச்சி களமிறக்கப்பட்டிருக்கிறார்.
சிவாவின் சீனியர் ஆபிஸராக நடித்திருக்கிறார் பிரபு. ஆக்ஷன் படமாக இருந்தாலும், வழக்கம்போல் சிவகார்த்திகேயனின் சரவெடி காமெடிகள் படம் முழுக்க இருக்குமாம்.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறது காக்கிச்சட்டை டீம்!
அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் நவம்பரில் வெளியிடவிருக்கிறார்கள்


No comments:

Post a Comment