மீகாமன் படத்தில் நடித்து
முடித்து விட்டார் ஆர்யா. அதையடுத்து எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, விஷ்ணுவர்தனின் யட்சன்
ஆகிய படங்களில்
நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ராஜாராணி
படத்தில் நடிக்கிறது வரை படப்பிடிப்பு தளத்தில் ஜாலி அரட்டை அடிப்பதையே
பொழுதுபோக்காக கொண்டிருந்த ஆர்யா, ஆரம்பம்
படத்தில் அஜீத்துடன் நடித்தபோது அவர் அமைதியே உருவாய் படப்பிடிப்பு தளத்தில்
அமர்ந்திருந்ததைப் பார்த்து, தனது
கேரக்டரையும் தற்போது மாற்றத் தொடங்கியிருக்கிறார்.
ஆனால், அஜீத் மாதிரியெல்லாம் தன்னால் அமைதியாக இருப்பது கடினமான விசயம் என்பதால், தனது கவனத்தை ஏதாவது ஒரு விசயத்தில் செலுத்தினால்
அமைதியானவராக மாறி விட வேண்டும் என்று பலத்த யோசனை செய்து வந்த ஆர்யா, சில நடிகைகள் படப்பிடிபபு தளங்களிலேயே
புத்தகமும் கையுமாக திரிவதைப்பார்த்து, நாமும் புத்தகம் படித்தால் என்ன என்ற ஐடியா தோன்ற, தற்போது படப்பிடிப்பு தளங்களில்
தனக்கான ஷாட் முடிந்ததும் ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கத்
தொடங்கி விடுகிறார்.
அப்படி ஆர்யா எந்தமாதிரியான புத்தகங்கள் படிக்கிறார்? என்று விசாரித்தால், ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை
படிக்கிறாராம். அதோடு அப்படி தான் படித்த விசயங்களை அதன்பிறகு சக நடிகர்-நடிகைகளிடமும்
பகிர்ந்து கொள்ளும் ஆர்யாவின் பேச்சில் இப்போது நிறைய அழுத்தம் தெரிகிறதாம்.
அதனால் அரட்டை பார்ட்டி ஆர்யா இப்போது அதிரடி பேச்சாளராக மாறிக் கொண்டிருக்கிறார்
என்கிறார்கள்.
No comments:
Post a Comment