'கத்தி' முடிந்து,
'என்னை அறிந்தால்' படத்திற்கு மாறிய சமூக
வலைத்தள ரசிகர்கள் தற்போது 'லிங்கா'விற்கு
மாறிவிட்டனர். நேற்று
மாலை வெளியிடப்பட்ட 'லிங்கா' படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்குள் யு டியூப் வீடியோ
இணையதளத்தில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறது. சமீப
காலமாக யு டியூப் என்றால் எத்தனை ஹிட்ஸ்கள் என்பதும், சமூக வலைத்தளங்கள் என்றால் எத்தனை லைக், எத்தனை ரி-ட்வீட் என்று பேசுவதும்தான்
வாடிக்கையாகிவிட்டது.'கோச்சடையான்' படத்தின் டீசர் சாதனைதான் முதன் முதலாக பெரிய
அளவில் பார்வையாளர்களை பார்க்க வைத்தது. 2013ல்
வெளியிடப்பட்ட 'கோச்சடையான்' படத்தின் டீசர் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களால்
பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 'லிங்கா' படத்தின்
டீசர் ஒரு நாளைக்குள் ஒன்பது லட்சம் ஹிட்ஸ்களை மட்டுமே தாண்டியுள்ளது. இதை மிகப்
பெரிய சாதனை என்று சொல்ல முடியாது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ' படத்தின் டீசர் செப்டம்பர் மாதம்
வெளியிடப்பட்டு ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்தது. ஆனால், 'லிங்கா' டீசரால் 'ஐ' படத்தின் அந்தச் சாதனையை முறியடிக்க
முடியவில்லை. ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் என்று இருந்தாலும் 'லிங்கா' டீசர், 'ஐ' டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூடத் தொட முடியாதது, ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த உண்மை..
No comments:
Post a Comment