எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் -
இசை. சிலவருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை
அடைந்திருக்கிறது. நவம்பர்
21-ஆம் தேதி
இப்படத்தின் பாடலிசையை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவே
இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்த
அன்பே ஆருயிரே மற்றும் நியூ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை அமைத்திருந்தார்.
எனவே, இசை படத்திற்கும் இசையமைக்க
எஸ்.ஜே.சூர்யா முதலில் அணுகியது ஏ.ஆர்.ரஹ்மானைத்தான்.
இசை சம்பந்தமான கதையை
கொண்ட படம், அதோடு இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையிலான மோதலைப் பற்றிய கதை இது என்பதால்
தான் இசையமைக்க மறுத்துவிட்ட ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யாவின் இசைஞானம் பற்றி
அறிந்தவர் என்பதால் நீங்களே இசையமைக்கலாமே என்று சொல்ல...
எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பாளர்
ஆனார்..
இசை படத்தின் பாடல்களை
வருகிற 9-ஆம் தேதி வித்தியாசமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.
அன்றைய தினம்தான்
ரஜினியின் லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது.
இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்
இசை அமைத்துள்ள லிங்கா படப் பாடல்கள் வெளியாகும் அதே நாளிலேயே எஸ்.ஜே.சூர்யா இசை
அமைத்துள்ள இசை படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது.
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பது என்பது இதானா?
No comments:
Post a Comment