Sunday, November 2, 2014

கால்ஷீட்டில் சொதப்பும் விஜய்சேதுபதி!

இன்றைய இளம் நடிகர்களில் எளிமையானவர் விஜய்சேதுபதி. எந்த ஈகோவும் இல்லாமல் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தால
உடனே நடிக்க ஒப்புக் கொள்வார். சம்பளத்தை பற்றிக்கூட பெரிதாக நினைக்க மாட்டார். அதுவும் தனக்கு ஆரம்ப காலத்தில் வாய்ப்பளித்தவர்கள். உடன் இருந்த நண்பர்கள் கேட்டால் உடனே நடிக்கிறேன் என்பார்.தற்போது அவர் வன்மம், ஆரஞ்சுமிட்டாய், புறம்போக்கு, நானும் ரவுடிதான் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை படங்களில் நடித்தாலும் தன்னை முதன் முதலாக ஹீரோவாக்கிய சீனு ராமசாமி கேட்டதும் கதைகூட கேட்காமல் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க ஊட்டிக்கு கிளம்பி போய்விட்டார். நல்ல கேரக்டர்கள், நண்பர்கள், வாய்ப்பளித்தவர்கள் என்ற சகட்டுமேனிக்கு ஒத்துக் கொண்டதால் தற்போது கால்ஷீட் பிரச்சினையில் கிடந்து தவிக்கிறார்.

தன் சொந்த தயாரிப்பில் சங்குதேவன் என்ற படத்தில் நடிக்க மூன்று மாதம் ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த படம் டிராப் ஆனதால் அதற்கு முன் அவரிடம் கதை சொல்லியிருந்த மெல்லிசை படத்தை எடுக்க சொல்லிவிட்டார். அந்த படம் முடிந்தும் இன்னும் வெளிவரவில்லை.

இதற்கிடையில் வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க ஸ்டூடியோ 9 நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்து அதற்கான அட்வான்சும் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை. தனது படத்தில் நடிக்க மறுப்பதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் நடிகர் சங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இன்னும் இப்படி பல புகார்கள் வரலாம் என்று விஜய்சேதுபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


No comments:

Post a Comment